Take a fresh look at your lifestyle.

அமெரிக்க துணை அதிபருடன் பிரதமர் மோடி போனில் பேச்சு

6

புதுடில்லி: பிரதமர் மோடி அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸுடன் தொலைபேசியில் முக்கியத் துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்துவது குறித்து பேசினார்.

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. முக்கியத் துறைகளில் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம்.

ஆண் குழந்தை பிறந்ததற்காக வான்ஸ் மற்றும் இரண்டாம் பெண்மணி உஷா வான்ஸ் தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தேன். அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களையும் கூறினேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அரசு சாரா நிறுவனங்கள், அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மத அமைப்புகள் பெறும் வெளிநாட்டு நன்கொடைகளை நிர்வகிக்கும் இந்தியாவின் சட்டங்களில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து அமெரிக்க எம்பி பேசியது சர்ச்சையை கிளப்பியது.

இருதரப்பு உறவுகளில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்று இந்தியா எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு, ஜே.டி. வான்ஸிடமிருந்து பிரதமர் மோடிக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.