பத்திரிக்கையாளர் நல வாரியத்தின் மூலம் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் ஏனைய பிற உதவித்தொகையுடன் விபத்து நிவாரணம் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த திமுக ஆட்சியின் போது 28 10 2024 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் நல வாரியத்தின் 8வது குழு கூட்டத்தில், விபத்தினால் மரணம் ஏற்படும் பத்திரிகையாளர்களுக்கு உதவித் தொகையாக ரூ 2 லட்சம் வழங்கலாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் இத்த தீர்மானம் தொடர்பாக 14 8 2025 அன்று நடைபெற்ற 9வது குழு கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டு அரசால் வழங்கப்படும் விளம்பர கட்டணத்தில் ஒரு சதவீத தொகை பத்திரிகையாளர் நல வாரிய நலத்திட்ட உதவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்றும் இத்தொகையில் இருந்து தான் விபத்தினால் மரணம் அடையும் பத்திரிகையாளர்களுக்கு உதவித் தொகையாக 2 லட்சம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கோரப்படாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கான அரசாணை தற்போது வெளியாகி உள்ளது.
அரசாணையை வெளியிட்ட தமிழ்நாடு அரசிற்கு தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ்
அமைப்பு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.