சென்னை மதுரவாயலில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மற்றும் ஆலபாக்கம் சண்முகம் ஆகியோரின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி தினகரன் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு பகுதி கழக செயலாளர் காரம்பாக்கம் கணபதி மற்றும் வடக்கு பகுதி கழக செயலாளர் 11-வது மண்டல குழு தலைவர் நெளம்பூர் ராஜன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர். உடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அருணாச்சலம், மாமன்ற உறுப்பினர் செல்வகுமார்,146-வ து வட்ட செயலாளர் ரூபன், பாலாஜி,கர்னல்,மதியழகன்,மாமன்ற உறுப்பினர்கள் ராஜு,மாலினி, ரமணி மாதவன்,வட்ட செயலாளர்கள் ராதா செல்வம்,சார்லஸ், ரமேஷ்ராஜ், மாதவன், அன்னாதாசன், பிருந்தாவனன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைத்து ஏற்பாடுகளையும் தினகரன் சண்முகம் குடும்பத்தினர் செய்திருந்தனர்.