குறும்பட விழாவில் Producer Bazaar-ன் டிஸ்கவரி பிலிம் மார்க்கெட் அறிமுகம்!

இந்திய திரைப்பட மற்றும் பொழுதுபோக்கு துறையில் உள்ளடக்கங்களை வணிகமயமாக்கும் நோக்கில், Producer Bazaar முன்னெடுக்கும் Discovery Film Market (DFM), ஆஸ்கர் அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே குறும்பட விழாவான 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா (BISFF)-வின் முக்கிய அங்கமாக இந்த ஆண்டு அறிமுகமாகிறது. படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள், OTT தளங்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் உள்ளடக்க வாங்குபவர்களை ஒரே தொழில்முறை வணிகச் சூழலில் இணைக்கும் தேசிய அளவிலான B2B திரைப்பட சந்தையாக இது உருவாகியுள்ளது.

BISFF மேடையில் Producer Bazaar-ன் தேசிய முன்னெடுப்பு:

ஆகஸ்ட் 15 மற்றும் 16 (சனி & ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும் 16வது பெங்களூரு சர்வதேச குறும்பட விழா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெறும் Producer Bazaar Discovery Film Market, இந்திய திரைப்படத் துறையின் படைப்பாற்றலுக்கும் வணிகத்திற்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் முக்கிய தளமாக அமையும். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரைப்படத் துறையின் முன்னணி நிறுவனங்கள், படைப்பாளிகள் மற்றும் முடிவெடுக்கும் நிர்வாகிகளை ஒரே மேடையில் சந்திக்கும் வாய்ப்பை இந்த சந்தை வழங்குகிறது.

“இந்தியாவின் உள்ளடக்க பொருளாதாரத்தை வலுப்படுத்தும் ஆண்டு முழுவதும் செயல்படும் சந்தையை உருவாக்குவதே எங்கள் இலக்கு” – ஜி.கே. திருநாவுக்கரசு, CEO & Founder – ProducerBazaar
இந்த முயற்சி குறித்து Producer Bazaar நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு கூறுகையில்,
“இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 2,500 திரைப்படங்கள் உருவாகின்றன. ஆனால், திரைப்படங்களுக்கான தொழில்முறை Film Market-கள் ஆண்டுக்கு ஐந்து அல்லது ஆறு மட்டுமே நடைபெறுகின்றன. இந்த இடைவெளியை நிரப்புவதற்காகவே Producer Bazaar Discovery Film Market உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உலகத் தரமான கதைகளும் திறமையான படைப்பாளிகளும் ஏராளமாக இருந்தாலும், அவர்களுக்கு சரியான முதலீட்டாளர்கள், வாங்குபவர்கள், உரிமம் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் விநியோக வாய்ப்புகளை அடைவது இன்னும் சவாலாகவே உள்ளது.

Producer Bazaar மூலம், படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள், OTT தளங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் உள்ளடக்க வாங்குபவர்கள் நேரடியாக இணையும் தொழில்முறை B2B சந்தையை உருவாக்குகிறோம். தரமான உள்ளடக்கங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறுவதோடு, அர்த்தமுள்ள கூட்டாண்மைகளும் உருவாகும். இந்தியாவின் Content Economy-ஐ வலுப்படுத்தும், ஆண்டு முழுவதும் செயல்படும் Content Marketplace-ஆக Discovery Film Market-ஐ வளர்ப்பதே எங்கள் நோக்கம்.”
என்றார்.

Comments (0)
Add Comment