நடிகர் ஜீவா நடிப்பில் லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் உணர்வுபூர்வமான கதைக்களத்தையும், கிராமத்து மண்வாசனையையும் பிரதிபலிப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.
இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா – மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு ஆழமான குடும்பக் கதையாக உருவாகி வருகிறது.
படத்தை ஒரே கட்டமாக படமாக்க திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 50 சதவீத படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பின் போது காட்சிகளை நேரில் பார்த்த பொதுமக்கள் பலரும் உணர்ச்சிவசப்பட்டு, படக்குழுவினரை நேரில் பாராட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது படத்தின் மீது மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘தெனாவட்டு ’ திரைப்படத்திற்குப் பிறகு, முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் ஜீவா நடிக்கும் திரைப்படமாக ‘தகப்பன்’ உருவாகி வருகிறது.