Take a fresh look at your lifestyle.

காட்டுக்குள் வீடு 150 கோடி வீண்!

14

ஈரோட்டை அடுத்த சித்தோடு பேரூராட்சி நல்லா கவுண்டன் பாளையத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் மாண்புமிகு பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் காந்தி நகர் பகுதியில் 149.18 கோடி ரூபாய் செலவில் 1824 குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. திட்டம் ஆரம்பிக்கப்பட்ட தேதி 1. 6.2018. மேற்படி திட்டம் முடிக்கப்பட்ட ஆண்டு 30.11. 2019. வீடு கட்டி முடிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகியும் யாரும் குடி வரவில்லை. 1824 வீடுகள் சுமார் 150 கோடி செலவில் கட்டப்பட்டிருந்தாலும் நடுக்காட்டிற்குள் ஆள் நடமாட்டமே இல்லாத பகுதியில் வீடு கட்டப்பட்டு இருப்பதால் யாரும் விருப்பப்பட்டு இந்த வீட்டை விலைக்கு வாங்க முன்வரவில்லை. ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கட்டினால் இந்த வீடு ஒதுக்கப்படும். ஆனால் தற்பொழுது 34 நபர்கள் மட்டும்தான் இங்கே குடியிருந்து வருகிறார்கள். 1794 வீடுகள் காலியாக இருக்கின்றன. சித்தோடு பைபாஸிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் இந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊருக்கு பஸ் வசதி இல்லை. அடுக்குமாடி குடியிருப்பைச் சுற்றி புறம்போக்கு இடங்கள் நிறைய உள்ளன. போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் இந்த வீடுகளை விலைக்கு வாங்க பொதுமக்கள் யாரும் முன் வரவில்லை. ஏழு ஆண்டுகளாக 150 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளது.